பிரெக்சிட் விளைவு! பிரித்தானியா பிரதமர் ஜான்சனின் தந்தை பிரபல ஐரோப்பிய நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பம்! அவரே கூறிய காரணம்

Report Print Basu in பிரித்தானியா
974Shares

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சினின் தந்தை ஸ்டான்லி ஜான்சன் பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2020 டிசம்பர் 31 அன்றோடு இறுதியாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து செல்லும்.

இந்நிலையில், பிரெக்சிட்டுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது உறவைத் தக்க வைத்துக் கொள்ள பிரான்ஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஸ்டான்லி ஜான்சன் கூறினார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரான ஸ்டான்லி ஜான்சன், பிரெக்சிட் தொடர்பாக பிரித்தானியாவில் 2016 நடந்த வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடனே இருக்க ஆதரவாக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சுடன் வலுவான குடும்ப தொடர்புகள் இருப்பதால் பிரான்ஸ் குடிமகனாக மாற விரும்புவதாக ஸ்டான்லி ஜான்சன் கூறினார்.

நான் பிரஞ்சு. என் அம்மா பிரான்சில் பிறந்தார், அவரது தாயார் அவரது தாத்தாவைப் போலவே முற்றிலும் பிரெஞ்சுக்காரர்.

எனவே என்னைப் பொறுத்தவரை இது ஏற்கனவே எனக்கு உள்ள உரிமையை மீட்டெடுப்பதாகும். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று 80 வயதான ஸ்டான்லி ஜான்சன் கூறினார்.

நான் எப்போதும் ஒரு ஐரோப்பியனாக இருப்பேன், அது நிச்சயம். ‘நீங்கள் ஐரோப்பியர்கள் இல்லை’ என யாரும் பிரித்தானியா மக்களிடம் சொல்ல முடியாது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உறவு வைத்திருப்பது மிக முக்கியம் என்று ஸ்டான்லி ஜான்சன் கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்