பிரித்தானியாவில் 2024-தேர்தலில் யார் வெற்றி பெறுவார்? தோல்வி அடைவார் போரிஸ்! கடும் அதிருப்தியில் மக்கள்

Report Print Santhan in பிரித்தானியா
232Shares

பிரித்தானியாவின் தற்போதைய பிரதமராக உள்ள போரிஸ் ஜோன்சன் வரும் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், தன் தொகுதியிலே தோல்வி அடைவார் என்பது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் பாராளுமன்ற தேர்தல் 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கிடையில் பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியுள்ளது.

அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் போன்றவைகளை வைத்து, நடத்தப்பட்ட முதல் கருத்துக் கணிப்பில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து, தனியார் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில், பிரக்சில் விவகாரத்தை, பிரதமர் போரிஸ் ஜோன்சன் கையாண்ட விதம், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதிலும், அரசு தோல்வி அடைந்துள்ளதாக, மக்கள் கருதுகிறனர். தற்போது, மரபணு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது, மக்களுக்கு மேலும் அதிருப்தியை கொடுத்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது உறவினர்கள், நண்பர்களை சந்திக்க அனுமதி அளித்துவிட்டு, அதை உடனேயே திரும்பப் பெற்றது, மக்களிடையே, ஜோன்சனின் செல்வாக்கு குறைய காரணமாகிவிட்டது.

வரும், 2024 தேர்தலில், போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி, 284 இடங்களில் வெற்றி பெறலாம். எதிர்க்கட்சியான, லேபர் கட்சி, 282 இடங்களில் வெல்லலாம். இதன் வாயிலாக, 81 தொகுதிகளை கன்சர்வேடிவ் கட்சி இழக்க நேரிடும்.

மேலும், லண்டனுக்கு மேற்கே உள்ள உக்ஸ்பிரிட்ஜ் தொகுதியில், ஜோன்சனுக்கு தோல்வியே கிடைக்கும்.

பிரித்தானியாவில் இருந்து ஸ்காட்லாந்தை பிரிக்க வேண்டும் என போராடிவரும், ஸ்காட்டிஷ் தேசிய கட்சி, ஸ்காட்லாந்தில் உள்ள, 59 தொகுதிகளில், 57ல் வெற்றி பெறும்.

அதனால், அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கக் கூடிய சக்தியாக, அந்தக் கட்சி இருக்கும். வரும் மாதங்களில், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளைப் பொறுத்து, ஜோன்சன் மற்றும் அவரது கட்சியின் வெற்றி வாய்ப்பு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்