மீண்டும் தேசிய பூட்டுதலை அறிவிக்கும் நிலையில் பிரித்தானியா: முக்கிய முடிவை எடுக்கவுள்ள போரிஸ் ஜான்சன்

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
872Shares

பிரித்தானியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உருமாறிய வைரஸும் அதிகமாகப் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 54,990 பாதிப்புகளும், 454 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

இதனால், பிரித்தானியாவின் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,654,779-ஆக உயர்ந்துள்ளது மற்றும் 75,024 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், பிரித்தானியாவில் தேசிய அளவிலான பூட்டுதலை அறிவிப்பது குறித்து அரசாங்க அதிகாரிகளிடமிருந்து தொடர்ந்து பிரதமருக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுடன் ஒரு தேசிய பூட்டுதலைக் கொண்டுவருவதற்கான ஆலோசனையில் உள்ளார். மேலும், இதுகுறித்த முக்கியமான முடிவை அவர் இன்று எடுக்கவுள்ளார்.

பிரித்தானியாவில் மேலும் பல பகுதிகள் Tier 4 lockdown-ல் சில நாட்களில் மூழ்கக்கூடும் என்று அரசாங்க வட்டாரங்கள் கூறியதையடுத்து, கட்டுப்பாடுகள் 'கடுமையானதாகிவிடும்' என்று பிரதமர் நேற்று எச்சரித்திருந்தார்.

கடுமையான நடவடிக்கைகளின் கீழ், ஏற்கனவே நாட்டின் முக்கால்வாசி பகுதிகளில், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன, மேலும் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், பள்ளிகளை தொடர்ந்து மூடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், இன்னும் சில மணி நேரங்களில் புதிய பூட்டுதல் கட்டுப்பாடுகள் குறித்து முடிவுகளை எடுக்கும் அரசாங்கத்தின் 'Covid-O' குழு கூடுகிறது.

ஆலோசனைகள் முடிந்த பிறகு, அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதாக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பிரித்தானியாவில் மீண்டும் தேசிய பூட்டுதல் (National Lockdown) அமுல்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்