தடுப்பு மருந்துகள் எதுவும் வேலை செய்யாமல் போகலாம் - எச்சரிக்கும் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
879Shares

தென்னாப்பிரிக்காவில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக இப்போது கண்டுபிடித்துள்ள தடுப்பு மருந்துகள் செயல்படாமல் போகலாம் என ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உதவிய மூத்த விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான சர் ஜான் பெல், பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய வைரஸை விட தென்னாப்பிரிக்காவில் பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் மாறுபட்டது என்றும், அது அதிக வீரியம் கொண்டதாக இருக்கும் என கூறுகிறார்.

இதனால், இப்போது பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகள் பிரித்தானிய வகை வைரசுக்கு எதிராக பயன்படுத்தப்படும் செயல்படும் என உறுதியாக நம்பப்படுகிறது. ஆனால், தென்னாப்பிரிக்க வகை வைரஸை கட்டுப்படுத்துமா என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

501.V2 என பெயரிடப்பட்டுள்ள தென்னாபிரிக்காவின் புதிய உருமாறிய கொரோனா வைரஸில் புரதத்தின் கட்டமைப்பில் கணிசமான மாற்றங்கள் உள்ளது என்றும், இதனால் அவை தடுப்புமருந்துகளை எதிர்க்கும் சக்திகொண்டதாக இருக்கும் என அவர் எச்சரிக்கிறார்.

கோவிட் தடுப்பூசி - நோய்க்கிருமியை எவ்வாறு எதிர்த்துப் போராடுவது என்பதை நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு கற்பிப்பதன் மூலம் நோயிலிருந்து பாதுகாக்கிறது.

இது ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. அதாவது எதிர்காலத்தில் மீண்டும் இந்த வைரஸ் தாக்குவதை எதிர்த்துப் போராடுவதற்காக நோய்களை எதிர்க்கும் புரதங்கள் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன.

ஆனால், இந்த வைரஸ் அதன் புரதங்களை மாற்றியமைத்ததால் ஆன்டிபாடிகள் அவற்றை அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும். அப்படியானால், ஒருவரது உடல் இரண்டாவது முறையாக ஒரு வைரஸைத் தாக்க போராட முயன்று, மீண்டும் தொற்று ஏற்பட எளிதாக வழிவகுக்கும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்