மலிவான உள்நாட்டு கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தத் தொடங்கியது பிரித்தானியா! முதல் ஊசியை பெற்ற ​​82 வயது டயாலிசிஸ் நோயாளி

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
326Shares

பிரித்தானியா அதன் உள்நாட்டு தயாரிப்பு மருந்தான அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு கொரோனா வைரஸ் தடுப்பூசியை இன்றுமுதல் குடிமக்களுக்கு செலுத்தத் தொடங்கியது.

​​82 வயதான டயாலிசிஸ் நோயாளியான பிரையன் பிங்கர், ஆக்ஸ்போர்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அதன் மருந்தை பெற்ற முதல் நபராக ஆனார்.

உலகிலேயே குறைந்த விலை மற்றும் எளிதில் போக்குவரத்துக்குரிய தடுப்பு மருந்தாக அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக COVID-19 தடுப்பூசியை பிரித்தானியா முதல் முறையாக வெளியிட்டது.

சுமார் 530,000 டோஸ்கள் முதற்கட்டமாக இங்கிலாந்தில் உள்ள 6 மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் எதிர்வரும் நாட்களில் நூற்றுக்கணக்கான பிற பிரித்தானிய தளங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மேலும் இது சில மாதங்களுக்குள் பல்லாயிரக்கணக்கான டோஸ்களை வழங்கும் என்று அரசாங்கம் நம்புகிறது.

கடந்த மாதம் ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்த தடுப்பூசியைப் பிரித்தானியா முதல் நாடாக பயன்படுத்த தொடங்கியது. மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டிய இந்த தடுப்பூசியை இதுவரை சுமார் ஒரு மில்லியன் மக்களுக்கு போட்டுள்ளது.

ஆனால், ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மலிவானது மற்றும் சாதாரண குளிர்சாதன பெட்டிகளில் உள்ள வெப்பநிலையில் சேமிக்க முடியும். மேலும் இது போக்குவரத்து மற்றும் பயன்பாட்டை எளிதாக்குகிறது.

ஆக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்புமருந்தை உலகிலேயே கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா அவசரகால பயன்பாட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்