கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1572Shares

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் மதுபானம் அருந்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மதுபானம் அருந்தினால், மதுபானம் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதை குறைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.

மனிதனுடைய குடலில் பல ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் உள்ளன, அவை உடலுக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகள் ஆகும்.

இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், உடலுக்குள் புதிதாக பாக்டீரியாக்களும் வைரஸ்களும் நுழைவதை தடுக்கும் முக்கியப் பணியாற்றுகின்றன.

மதுபானம், இந்த உடலிலுள்ள நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளில் விரும்பத்தகாத மாற்றங்களை உருவாக்கிவிடுகிறது.

அப்படி மாற்றம் ஏற்பட்டால், அதனால், நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கிய காரணமான வெள்ளை இரத்த அணுக்கள் பாதிக்கப்படும்.

இந்த வெள்ளை அணுக்கள்தான் உடலுக்குள் நுழையும் கெட்ட நுண்ணுயிரிகளுடன் போரிடக்கூடியவை.

Dr Ronx Ikharia எனும் மருத்துவர், மதுபானம் அருந்தும்போது இந்த வெள்ளை அணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது மதுபானம் அருந்துவதற்கு முன் இருந்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, மதுபானம் அருந்தியபின் 50 சதவிகிதம் வரை குறைவதை அவர் கண்டறிந்தார்.

ஆகவே, மதுபானம் அருந்துவதால் வெள்ளை அணுக்கள் குறைவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படி வெள்ளை அணுக்கள் குறைவதால், மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் என்கிறார் நோய் எதிர்ப்பு அறிவியல் நிபுணரான பேராசிரியர் Sheena Cruickshank.

கொரோனா தடுப்பூசி நல்ல பலன் கொடுக்கவேண்டுமானால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நல்ல நிலையில் இருக்கவேண்டும், ஆனால், நீங்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் அல்லது தடுப்பூசி போட்ட பின் மதுபானம் அருந்தினால், தடுப்பூசி உங்களுக்கு நல்ல பலன் தராது என்கிறார் அவர்.

ஆகவே, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள், மதுபானம் அருந்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்