பிரித்தானியாவில் தளர்வு இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதிய விதியின் ஊரடங்கு விதிமுறைகளை மீறினால், அதிக அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தெற்கு இங்கிலாந்தில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால், இங்கு கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
இதன் காரணமாக இங்கு மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ், ஏற்கெனவே இருக்கும் கொரோனா வைரஸைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் வேகம் கொண்டதாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவுக்கான விமானச் சேவையை 40-க்கும் மேற்பட்ட நாடுகள் தடை விதித்துள்ளன.

மேலும், கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பிரதமர் போரிஸ் ஜோன்சன் நேற்றிரவு பிரித்தானியா முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், லாக் டவுன் 3-ன் விதிமுறைகளை மீறினால் அதிக அபராதம்' விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ல் அடங்கிய பொலிஸ் கூட்டமைப்பின் தலைவர் ஜான் ஆப்டர், மூன்றாவது தேசிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், இந்த நேரத்தில் விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும், எந்த ஒரு காரணமும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது என்று எச்சரித்துள்ளார்.
மக்கள் இந்த கொரோனா விதிமுறைகளை அந்த அளவிற்கு பெரிதாக எடுத்து கொள்ளமாட்டார்கள் என்பதால், கடுமையான நடவடிக்கைகளில் பொலிசார் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NYE கட்சி அமைப்பாளர்கள் நடத்திய கூட்டத்தில் வேண்டுகோளை அவர்கள் புறக்கணித்ததால் 10,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.
ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, மற்றும் தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்ள அதிகாரிகள் ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட பகுதியினை பயன்படுத்த வேண்டும், அதை மீறினால் நடவடிக்கை கடுமையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.