இலங்கையர்கள் பலருக்கு பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது அறிவிப்பு: வெளியான பட்டியல்

Report Print Basu in பிரித்தானியா
1713Shares

பிரித்தானியா ராணியின் 2021 புத்தாண்டு கௌரவ பட்டியலில் பல பிரிட்டிஷ்-இலங்கையர்கள் இடம்பிடித்துள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானியா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்படுகிறது.

பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் Mohan Edirisinghe, பேராசிரியர் Ramani Moonesinghe, Gajan Wallooppillai, Dr Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு (CBE) விருது வழங்கப்படுகிறது.

பேராசிரியர் ரவி சில்வா, கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அவரது சிறந்த சேவைகளுக்காக CBE விருது பெறுகிறார்.

பேராசிரியர் Edirisinghe, சுகாதாரத்துறையில் மேம்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய முறைகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளார்.

மயக்க மருந்து, Perioperative மற்றும் தீவிர சிகிச்சை ஆகியவற்றில் ஆற்றிய சேவைகளுக்காக பேராசிரியர் Ramani Moonesinghe-க்கு OBE விருது வழங்கப்படுகிறது .

Gajan Wallooppillai, சமத்துவம் மற்றும் சமூக ஒற்றமைக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்காக OBE விருது பெறுகிறார்.

நுண்ணுயிரியல், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, குறிப்பாக நடவடிக்கைளின் போது ஆற்றிய சேவைகளுக்காக Dr Shikandhini Kanagasundrem-க்கு OBE விருது வழங்கப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள இலங்கை சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளுக்காக Mohamed Hazrath Haleem Ossman-க்கு OBE விருது வழங்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்