சாரதியை குளவி கொட்டியதால் ஏற்பட்ட கார் விபத்து... பெண் உயிரிழந்ததால் சாரதிக்கு சிக்கல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
180Shares

பிரித்தானியாவில் மூன்று கார்கள் மோதிக்கொண்ட விபத்து ஒன்றில் நான்கு பேர் காயமடைந்தார்கள், ஒரு பெண் உயிரிழந்தார்.

பிரித்தானியாவின் Kirklevington என்ற இடத்தில் மூன்று கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் Rosina Ingram என்ற பெண் உயிரிழந்தார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி ஒருவரது உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததாக Helen Shaw என்ற பெண் மீது வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, Helen தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, Helen கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது அவரை ஒரு குளவி கொட்டியதாகவும், அவர் மொத்த கட்டுப்பாட்டையும் இழந்ததால்தான் இந்த விபத்து நேரிட்டது என்றும் வாதிட்டார்.

விவாதங்களைக் கேட்ட நீதிபதி, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது அனுதாபத்தை தெரிவித்துக்கொண்டு, வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்