லண்டன் அருகில் 13 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒரு சிறுமி மற்றும் நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Berkshire-ஐ சேர்ந்த Olly Stephens (13) என்ற சிறுவன் கடந்த ஞாயிறு அன்று உள்ளூர் நேரப்படி 4 மணியளவில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக 13ல் இருந்து 14 வரையிலான ஒரு சிறுமி மற்றும் நான்கு சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. Ollyன் மரணத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் என நம்புவதாக அவரின் சகோதரி Emilia (16) கூறியுள்ளார்.
இது குறித்து நபர் ஒருவர் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் என் மனைவி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது Olly கீழே விழுந்து கிடப்பதையும் அவனை சுற்றி ஆட்கள் இருப்பதை பார்த்திருக்கிறார் என கூறியுள்ளார்.
துப்பறியும் கண்காணிப்பாளர் கெவின் பிரவுன் கூறுகையில், சம்பவம் தொடர்பில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக நாங்கள் ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளோம், இது தொடர்பில் யாருக்கேனும் தகவல் இருந்தால் தயவுசெய்து பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.