பிரித்தானியாவில் பொது முடக்கம் எப்போது முடிவுக்கு வரும் தெரியாது! ஆனால் இது முதலில் திறக்கப்படும்: போரிஸ் உறுதி

Report Print Santhan in பிரித்தானியா
699Shares

பிரித்தானியாவில் பொது முடக்கம் எப்போது முடிவு பெறும் என்பது தெரியாது, ஆனால் அதே சமயம் அப்படி திறக்கப்பட்டால், முதலில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் தீவிரமானதால், இங்கு தேசிய அளவில் பொதுமுடக்கம் மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும், கடுமையான தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கிறிஸ்மஸ்க்கு முந்தைய வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கிட்டத்தட்ட 3,000 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து, இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று, பொதுமுடக்கம் எப்போது முடிவுக்கு வரும் என்பது சரியாக தெரியவில்லை, ஆனால் முதல் விஷயமாக பள்ளி மீண்டும் திறப்பது தான் இருக்கும் என்று அவர் கூறினார்.

பள்ளி என்பது குழந்தைகளுக்கு சிறந்த இடம், ஆனால் அதே சமயம் அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், இதனால் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்