லண்டனில் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய பெண் குறித்து பொலிசார் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா
249Shares

லண்டனில் இரண்டு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய பெண் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

Tamara Clifton என்ற 40 வயதான பெண்ணுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் டிசம்பர் மாதம் நடந்த இரண்டு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருந்திருக்கிறது.

இதன்பின்னர் அவரை பொலிசார் கைது செய்தனர்.

ஜாமீனில் வெளியில் வந்த Tamara Clifton சட்டத்தை மீறி தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் அவரின் புகைப்படத்தை வெளியிட்டு Tamara-வை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவ வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

இது குறித்து டிடெக்டிவ் அதிகாரி ரோவினா டொனி கூறுகையில், Tamara-வை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த பெண்ணைப் பார்த்தாலோ அல்லது அவர் தங்கியிருக்கிற இடம் குறித்து தெரிந்தாலோ பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்