இன்னும் 5 நாட்கள்தான்... வெளிநாடுகளுக்கு சென்றுள்ள பிரித்தானியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கெடு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
296Shares

ஐந்து நாட்களுக்குள் நாடு திரும்ப பிரித்தானியர்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது! அப்படி அவர்கள் ஐந்து நாட்களுக்குள் நாடு திரும்பவில்லையென்றால், அதன்பின், அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்று நிரூபித்தாலொழிய, பிரித்தானியாவுக்குள் நுழைய அவர்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரித்தானிய போக்குவரத்துச் செயலர் இன்று தெரிவித்துள்ளார்.

சுமார் 100,000 பிரித்தானியர்கள் வெளிநாடுகளிலிருக்கும் நிலையில், இந்த விதி அடுத்த புதன் அல்லது வியாழக்கிழமை அமுலுக்கு வர உள்ளதால், அவர்கள் அவசர அவசரமாக நாடு திரும்பவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

இந்த வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டால், அதன் பின், முறையான பாஸ்போர்ட் மற்றும் விசாவுடன் கூட, தங்களுக்கு கொரோனா இல்லை என காட்டும் ஆதாரத்துடனும் வந்தாலொழிய பிரித்தானியாவுக்கு விமானத்திலானாலும் சரி, ரயில் அல்லது கப்பலிலானாலும் சரி, பிரித்தானியாவுக்கு வர அனுமதி கிடைக்காது என்று கூறியுள்ளார் பிரித்தானிய போக்குவரத்துச் செயலரான Grant Shapps.

அத்துடன், நாடு திரும்புவோர் அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற ஆதாரத்துடன் வந்தாலும், தங்களை பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்