லண்டனில் நிலைமை கையை மீறிவிட்டது! இதே நீடித்தால் நிலைமை அவ்வளவு தான்: மேயர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா
1760Shares

லண்டனில் நிலைமை கையை மீறி போய்விட்டதாகவும், மக்கள் தயவு செய்து வீட்டிற்குள்ளே இருக்கும் படி மேயர் சாதிக்கான் மக்களை எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

குறிப்பாக தலைநகர் லண்டனில் இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால்,அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லண்டன் மேயர் சாதிக்கான், லண்டனில் வசிக்கும் மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்கும் படியும், வார இறுதியில் வெளியில் எங்கும் செல்லாமால், தங்கள் வீட்டில் இருக்கும் படியும், இந்த வைரஸ் நகரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இப்போது இந்த வைரஸ் விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், அதிகமான மக்கள் இறக்க நேரிடும்.

லண்டன் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை டிசம்பர் 30 முதல் ஜனவரி 6-ஆம் திகதி வரை 27 சதவீதம் (5,524 முதல் 7,034 வரை) அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் எண்ணிக்கை வென்டிலேட்டர்களில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 42 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் கொரோனாவுக்கான நேர்மறையான பரிசோதனையைத் தொடர்ந்து லண்டன் மருத்துவமனைகளில் 477 பேர் இறந்துள்ளதாக என்.ஹெச்.எஸ் தெரிவித்துள்ளது.

லண்டன் ஆம்புலன்ஸ் சேவை இப்போது நாள் ஒன்றிற்கு 8,000 அவசரகால அழைப்புகளை எடுத்து வருகிறது.

ஆனால் இதற்கு முன்பு ஒரு வழக்கமான பரபரப்பு நாளாக இருந்தால் கூட அது 5,500 ஆகவே இருந்தது. இதனால் லண்டனில் இந்த வைரஸ் பரவல் என்பது கையை மீறி சென்று கொண்டிருக்கிறது.

லண்டனில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் என்.எச்.எஸ் ஊழியர்கள் ஒரு அற்புதமான வேலையைச் செய்து வருகிறார்கள்.

கொரோனா வழக்குகள் மிக விரைவாக அதிகரித்து வருவதால், எங்கள் மருத்துவமனைகள் அதிகமாகிவிடும் அபாயம் உள்ளது.

வைரஸின் பரவல் வெகுவாகக் குறைக்கப்படாவிட்டால், அடுத்த இரண்டு வாரங்களில் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாமல் போய்விடும் என்பதுதான் உண்மை.

நீங்கள் வெளியேற வேண்டிய அவசியம் இல்லாவிட்டால் தயவுசெய்து வீட்டிலேயே இருக்குமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிற லண்டன் வாசிகளை பாதுகாக்கவும், எங்கள் என்.எச்.எஸ் ஊழியர்களை பாதுகாக்கவும் வீட்டிலேயே இருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு...

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்