லண்டனில் சிறுவர், சிறுமிகளுடன் அதிக நேரம் செலவிடும் பணியில் இருந்த நபர் செய்த மோசமான செயல்! நீதிமன்றம் அளித்த தண்டனை

Report Print Raju Raju in பிரித்தானியா
1986Shares

லண்டனில் 11 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Lewishamஐ சேர்ந்தவர் Otis Byron Trezel (37). இவர் பள்ளி சிறுவர்களுக்கு நல்ல பழக்கங்களை கற்று தரும் வழிகாட்டியாகவும், மாணவர்கள் விளையாடும் கால்பந்து அணி மேலாளராகவும் இருந்தார்.

இதன் மூலம் சிறுவர், சிறுமிகளுடன் அதிக நேரத்தை Otis செலவிடுவார்.

இந்த சூழலில் 11 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட Otis அவர் மீது வன்கொடுமை தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் அவரை கைது செய்தனர்.

Otis மீதான வழக்கு Croydon Crown நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அங்கு அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 64 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்