இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்... ஒரே ஆண்டில் அதிக இறப்புகளை சந்தித்த பிரித்தானியா

Report Print Arbin Arbin in பிரித்தானியா
49676Shares

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கடந்த 2020-ல் மட்டும் பிரித்தானியாவில் அதிக மரணம் நிகழ்ந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளின் சராசரியை விட சுமார் 91,000 இறப்புகள் கூடுதலாக நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், 2020-ல் மொத்தம் 697,000 பேர் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது மரண எண்ணிக்கையில் சுமார் 15 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டுமின்றி கடந்த 75 ஆண்டுகளில் இது மிகப்பெரிய உயர்வு எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொரோனா இறப்புகள் முக்கிய காரணியாக கூறப்பட்டாலும், எஞ்சிய ஐரோப்பிய நாடுகளை விடவும் பிரித்தானியாவில் இறப்பு விகிதம் அதிகரிக்க காரணம் என்ன என்பது தொடர்பில் அரசாங்கம் கேள்வியை எதிகொண்டுள்ளது.

கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்க, பிரித்தானியாவின் இறப்பு எண்ணிக்கையும் இன்னும் மோசமடையும் என்றே நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரித்தானியாவில் கொரோனா பாதிப்புக்கு 6,485 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.

உலகில் அதிகமான இறப்புகளை பதிவு செய்துள்ள நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா உள்ளது.

மட்டுமின்றி, எஞ்சிய ஐரோப்பிய நாடுகள் அல்லது அமெரிக்காவை விட இறப்பு விகிதத்தில் அதிக எண்ணிக்கையை பிரித்தானியா பதிவு செய்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் நிர்வாகத்தின் தவறு காரணமாக இறப்புகள் ஏற்பட்டதாக கூறும் நிபுணர்கள் தரப்பு,

ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவருவதில் அரசாங்கம் தொடர்ந்து தாமதம் காட்டியதாகவும், போரிஸ் அரசாங்கம் முன்னர் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவோ, எஞ்சிய நாடுகளின் நிலைமைகளை கண்டு அனுபவம் பெறவும் தவறியதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொடர்பாக மட்டும் பிரித்தானியாவில் 98,000 பேர்கள் மரணமடைந்துள்ளனர். இதில் 93,030 பேர்கள் கொரோனாவால் இறந்ததாகவே உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்