பிரித்தானியாவில் கட்டுப்பாடுகளை விதித்த பிரதமரே இப்படி விதியை மீறலாமா? வைரலாகும் புகைப்படம்: எழுந்த சர்ச்சை

Report Print Santhan in பிரித்தானியா
562Shares

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த பிரதமர் போரிஸ் ஜோன்சன், அவரே அந்த கட்டுப்பாடுகளை மீறி சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் புதிதாக உருமாறி தீவிரமாக பரவி வருகிறது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விட, இப்போது இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி வருகிறது.

அதுமட்டுமின்றி, கொரோனாவால் அதிகமான உயிரிழப்புகளை சந்திந்த்த நாடுகளில் பட்டியலில் பிரித்தானியாவும் உள்ளது.

இதனால் தேசிய அளவிலான ஊரடங்கை கடந்த வாரம் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்தார். இந்த கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரே எச்சரித்தார்.

இந்நிலையில் போரிஸ் ஜோன்சன் தனது வீட்டிலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு பத்து கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ஸ்டார்ட்போர்ட் பகுதியில் உள்ள ஒலிம்பிக் பூங்காவிற்கு சென்றுள்ளார்.

உடற்பயிற்சிக்காக அவர் சென்றதாக பிரதமர் அலுவலகம் கூறுகிறது. இருப்பினும் ஊரடங்கு போட்டுவிட்டு அதனை பிரதமரே மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அந்நாட்டின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் பிரதமரின் நடவடிக்கையை கண்டித்துள்ளது. இதனால் அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

நகரின் காவல் துறை ஆணையர் இது குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். பொது வாழ்வில் இருப்பவர்களை மக்கள் ரோல் மாடலாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

உடற்பயிற்சி செய்ய கொரோனா விதிகளில் அனுமதி உண்டு என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படியே போரிஸ் ஜோன்சன் செயல்பட்டதாகவும் கூறினார்.

ஆனால் உடற்பயிற்சிக்காக ஒருவர் எவ்வளவு தூரம் வெளியில் செல்லலாம், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தியோ, வாகனத்தை ஓட்டிக்கொண்டோ செல்லலாமா என்பது பற்றி விளக்கமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்