அழுகிய மீன்களை பிரதமர் வீட்டு முன் கொட்டிவிடுவோம்: எச்சரிக்கும் பிரித்தானிய மீனவர்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
176Shares

பிரெக்சிட்டால் ஏற்பட்டுள்ள ஏற்றுமதி பிரச்சினைகளை தீர்க்கவில்லையானால், அழுகிய மீன்களை பிரதமர் வீட்டு முன் கொட்டிவிடுவோம் என எச்சரித்துள்ளார்கள் பிரித்தானிய மீனவர்கள்.

ஜனவரி 1ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரெக்சிட்டுக்குப் பிந்தைய ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நாளிலிருந்தே பிரித்தானிய மீனவர்கள், தகவல் தொடர்பு முதல் பல பிரச்சினைகளால், பிடித்த மீன்களை உடனே ஏற்றுமதி செய்ய முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.

ஐரோப்பாவுக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, பிடித்துவைத்துள்ள மீன்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏற்றுமதி தாமதத்தால் மீன் வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், அடுத்த வாரத்திற்குள் மீன் ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்றால், பிடித்த மீன்களை, அழுகிய மீன்களை, பிரதமர் இல்ல வாசலில் கொண்டுவந்து கொட்டிவிடுவோம் என எச்சரித்துள்ளார்கள் மீனவர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்