வெளிநாட்டிலிருந்து பிரித்தானியா வருபவர்களுக்கு புதிய விதி அறிமுகம்.. பின்பற்றாவிட்டால் இதுதான் கதி: அரசு முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரித்தானியா
3139Shares

வெளிநாட்டிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கான, புறப்படுவதற்கு முன் கொரோனா சோதனை செய்ய வேண்டுமென்ற விதி திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று போக்குவரத்து அமைச்சர் Grant Shapps தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் பயணிகள் கொரோனா இல்லை என சோதனை செய்ததற்கான ஆதாரத்தை ஜனவரி 18 திங்கள் அதிகாலை 4 மணி முதல் வழங்க வேண்டும் என்று Shapps ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா குடிமக்களுக்கும் இந்த விதி பொருந்தும். பிரித்தானியா புறப்படுவதற்கு 3 நாட்களுக்குள் தான் கொரோனா சோதனை மேற்கொண்டிருக்க வேண்டும், மேலும், அந்த சோதனை முடிவில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும்.

வெளிநாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்பதற்கு முன் அந்த சான்றிதழை வழங்க வேண்டும், சான்றிதழ் வழங்காவிட்டால் அவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இல்லாமல் பிரித்தானியா வரும் பயணிகளுக்கு 500 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என Grant Shapps தெரிவித்துள்ளார்.

மேலும், பிரித்தானியா வருவதற்கு முன்பு ‘இருப்பிடம்’ குறித்த படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்று Shapps கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்