கர்ப்பினி பெண் ஸ்கேன் செய்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி! என்ன தெரிந்தது தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா
1967Shares

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஸ்கேன் செய்து பார்த்த போது, அதில் டிரம்பின் முகம் போன்று இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியாவின் Newcastle பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க Leanne Harris என்பவர் கர்ப்பிணியாக உள்ளார்.

20 வார கர்ப்பிணியான இவர் சமீபர்த்தில் தனது குழந்தையின் ஆரோக்கியத்திற்காக மருத்துவமனைக்கு சென்று சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு செய்யப்பட்ட அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில், Leanne Harris பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏனெனில் அதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகம் போன்று தெரிந்ததால், அவர் அந்த ஸ்கேனை தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது வித்தியாசமாக இருப்பதாகவும், ஆரம்பத்தில் நான் குழப்பமடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் ஒருவர், குழந்தையின் தலையில் ஒரு ஜாம்பி இருப்பது போல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், இது ஒரு கொரில்லாவைப் போலவே இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் நான் அதைப் உற்று கவனித்து பார்க்கும்போது, ​​அது டிரம்ப்பைப் போலவே இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று இந்த ஆண்டின் துவக்கத்தில், கர்ப்பிணி ஒருவர் எடுத்த ஸ்கேனின் போது, குழந்தை நடுவிரல் காண்பிப்பது போன்று இருக்கும் புகைப்படம் வைரலானது நினைவுகூரத்தக்கது.

(Image: Kennedy News and Media)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்