பிரேசில் வகை கொரோனா ஏற்கனவே பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிட்டது: அறிவியலாளர் அடுத்தடுத்து தரும் அதிர்ச்சி தகவல்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
229Shares

பிரேசில் வகை கொரோனா ஏற்கனவே பிரித்தானியாவுக்குள் நுழைந்துவிட்டதாக அறிவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரேசில் கொரோனா குறித்து இதுவரை வெளியாகாத ஒரு புது தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் திடீர் மாற்றம் பெற்று வெவ்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

திடீர் மாற்றம் பெற்ற வகை கொரோனா வைரஸ் முதலில் பிரித்தானியாவிலும், அடுத்து தென்னாப்பிரிக்காவிலும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது பிரேசிலிலும் மூன்றாவதாக ஒருவகை திடீர் மாற்றம் பெற்ற வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த பிரேசில் வகை கொரோனா வைரஸ் கொஞ்ச காலத்துக்கு முன்னாலேயே பிரித்தானியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்கிறார் பேராசிரியர் Wendy Barclay என்னும் அரசு சார் ஆய்வு ஒன்றின் தலைவரான அறிவியலாளர்.

அது மட்டுமின்றி, இந்த பிரேசில் கொரோனா வைரஸிலேயே இரண்டு வகை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பிரித்தானியாவில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளது, இந்த இரண்டு வகை பிரேசில் கொரோனா வைரஸ்களில் எது என்பது குறித்து அவர் விளக்கவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்