இறப்பதற்கு முன் தன் தாய்க்கு மகன் அனுப்பிய கடைசி குறுஞ் செய்தி! பிரித்தானியாவில் நடந்த துயர சம்பவம்

Report Print Santhan in பிரித்தானியா
775Shares

பிரித்தானியாவில் பரபரப்பு மிகுந்த சாலையில் இறந்த கிடந்த இளம் வயது தந்தை, தன்னுடைய தாயாருக்கு, இறப்பதற்கு முன் என் சகோதரர்களை கவனித்து கொள்ளுங்கள், உன்னை நேசிக்கிறேன் என்று குரல் வழி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் Sheffield-க்கு அருகில் இருக்கும் M1 மோட்டார் பாதையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் திகதி Levi Thompson என்பவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

தனது 24-வது பிறந்த நாளை கொண்டாடிய இரண்டு நாட்களுக்கு பிறகு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், குடும்பத்தினர் கடும் சோகத்தில் இருந்தனர்.

இதையடுத்து இது தொடர்பான பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் இறந்த இறப்பதற்கு முன் Levi Thompson தன்னுடைய தாய்க்கு குரல் வழி குறுஞ் செய்தி அனுப்பியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று Levi Thompson அதிகாலை 1.30 மணிக்கு தன்னுடைய நண்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து, தன்னுடைய அம்மாவின் தொலைப்பேசிக்கு, குரல் வழி குறுஞ் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், என் சகோதரர்களைக் கவனியுங்கள். உன்னை நேசிக்கிறேன், பை....பை.... என்று அனுப்பியுள்ளார். இதைக் கேட்டதும், அவர் உடனடியாக Levi Thompson போனை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு அடுத்த சில மணி நேரத்திற்கு பிறகு Levi Thompson இறந்துவிட்டார் என்ற பேரதிர்ச்சி தரும் செய்தி அவர்களுக்கு கிடைத்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்