தடுப்பூசிகள் பயன் தராது... அந்த நாட்டில் உருமாறிய கொரோனாவால் ஆபத்து: எச்சரிக்கும் பிரித்தானிய நிபுணர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
2931Shares

பிரித்தானியாவின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் பிரேசில் நாட்டில் தற்போது உருமாற்றம் கண்டுள்ள கொரோனா தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவர் பேராசிரியர் நீல் பெர்குசன்.

இவரே தற்போது பிரேசில் நாட்டில் உருமாற்றம் கண்டுள்ள கொரோனா தொற்று தொடர்பில் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போது புழக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகள் அனைத்தும் பிரேசில் கொரோனாவால் செயல் திறனற்று போகும் எனவும்,

ஏற்கனவே ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இதனால் வளர்த்துக் கொள்ளப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியானது புதிய பிரேசில் கொரோனாவால் தகர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் இருந்து விமான சேவைகளை மொத்தமாக நிறுத்தியுள்ள அரசின் முடிவு பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ள பேராசிரியர் நீல் பெர்குசன்,

ஆனால், இதனால் மட்டும் அதனை தடுத்துவிட முடியும் என கண்டிப்பாக கருத முடியாது என்றார்.

பிரேசிலிய உருமாற்றம் பெற்ற கொரோனா குறித்த கவலைக்கு உண்மையான காரணங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை நாம் பிரித்தானியாவில் உருமாற்றம் பெற்ற தொற்று மற்றும் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற தொற்று என இருவகைகளை பார்த்தோம்.

ஆனால் இவற்றில் இருந்து மிக ஆபத்தான ஒன்று இந்த மூன்றாவது முறையாக பிரேசிலிய உருமாற்றம் பெற்ற கொரோனா.

அதன் உண்மையான தாக்கம் தொடர்பில் விரிவான தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என கூறும் அவர், கண்டிப்பாக நாம் அச்சம் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுவரையான பாதுகாப்பு உத்திகள் எதுவும் சில வேளை பயனற்றதாக போகலாம். தாமதப்படுத்தப்படுவதும் ஒருவகையில் ஆபத்தைக் கொண்டு வரலாம் என்றார் பேராசிரியர் நீல் பெர்குசன்.

இதனிடையே, புதிய உருமாற்றம் கண்ட கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தென் அமெரிக்கா, போர்ச்சுகல் மற்றும் கேப் வெர்தே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விமானங்களை வியாழக்கிழமை பிரித்தானியா தடை செய்தது.

மட்டுமின்றி தனிமைப்படுத்துதல் இல்லாத பயண சலுகைகளை திங்கட்கிழமை முதல் பிரித்தானியா ரத்து செய்ய உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்