பிரித்தானியாவில் கடும் குளிரில் நிர்வாணமாக சிறையிலடைக்கப்பட்ட பெண்மணி: பொலிசார் அளித்த விளக்கம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
889Shares

பிரித்தானியாவில் தவறுதலாக கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை, கடும் குளிரில் நிர்வாணமாக சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார் மன்னிப்பு கோரியுள்ளனர்.

பிரித்தானியாவின் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதியை சேர்ந்த 52 வயது யுவோன் ஃபாரெல் என்பவரிடமே பொலிசார் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளனர்.

கடந்த 2018 ஆகஸ்டு மாதம் தமது கணவருக்கு ஆதரவாக அமைதியான முறையில் சாலை நடுவே வாகனம் மீதமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக பொலிசார் இவரை கைது செய்தனர்.

தொடர்ந்து இவரது கோரிக்கைகள் எதையும் கண்டுகொள்ளாத பொலிசார், இவர் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்க்க வைத்து, சுமார் 3 மணி நேரம் அந்த கடும் குளிரில் சிறைக்குள் அடைத்துள்ளனர்.

சிறைக்குள் அணியும் பிரத்தியேக உடைகளை இவருக்கு வழங்கியுள்ள போதிலும், மத நம்பிக்கை காரணமாக யுவோன் ஃபாரெல் அந்த உடைகளை உடுத்த மறுத்துள்ளார்.

இதனையடுத்து போர்வை ஒன்றை இவருக்கு அளித்திருந்தாலும், நிர்வாண கோலத்தில் சுமார் 3 மணி நேரம் அவர் அந்த கடும் குளிரில் போராடியுள்ளார்.

கைது செய்யப்பட்டு சுமார் 11 மணி நேரத்திற்கு பிறகு, நள்ளிரவில் யுவோன் ஃபாரெல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவரை தவறுதலாக கைது செய்த விவகாரத்தில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் காவற்படைப் பிரிவு கடந்த ஆண்டு இழப்பீடாக 45,000 பவுண்டுகள் தொகையை அளிக்க முன்வந்தது.

ஆனால் அவரிடம் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோராமல் இருந்து வந்தது.

சம்பவம் நடந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் காவற்படைப் பிரிவு தற்போது அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக தவறேதும் தாம் செய்யவில்லை என பல முறை கெஞ்சியும் பொலிசார் தம்மை கைது செய்தாக கூறும் யுவோன் ஃபாரெல்,

சம்பவம் நடந்த அன்றைய நாளை தாம் ஒருபோதும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்