கொரோனாவுக்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் பல திட்டங்களை செயல்படுத்திவரும் பிரித்தானிய அரசு, அந்நாட்டில் மேலும் 10 வெகுஜன தடுப்பூசி மையங்களை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் நாடு முழுவதும் தற்போது 7 வெகுஜன தடுப்பூசி மையங்கள், 1,000 GP தலைமையிலான சிகிச்சை மையங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிவருகிறது.
இந்நிலையில், மேலும் 10 வெகுஜன கொரோனா தடுப்பூசி மையங்கள் (Mass Vaccination Centre) புதிதாக அமைக்கப்படவுள்ளன. அவை வரும் திங்கட்கிழமை (ஜனவரி 18) முதல் செயமுறைக்கு வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதமூலம் வாரத்திற்கு 2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை இலக்காகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
புதிய 10 வெகுஜன தடுப்பூசி மையங்கள்:

- தெற்கு கடற்கரையில் போர்ன்மவுத் சர்வதேச மையம்
- சோமர்செட்டில் டவுன்டன் ரேஸ்கோர்ஸ்
- லங்காஷயரில் உள்ள பிளாக்பர்ன் கதீட்ரல்
- பெர்க்ஷயரின் ஸ்லோவில் உள்ள சால்ட் ஹில் செயல்பாட்டு மையம்
- நோர்போக்கில் உள்ள நார்விச் உணவு நீதிமன்றம்
- விக்ஃபோர்டில் உள்ள லாட்ஜ், எசெக்ஸ்
- லிங்கன்ஷையரில் இளவரசி ராயல் விளையாட்டு அரங்கம்
- மெர்ஸ்சைடில் உள்ள செயின்ட் ஹெலன்ஸ் ரக்பி மைதானம்
- யார்க்கில் உள்ள அஸ்காம் பட்டியில் பூங்கா மற்றும் சவாரி
- வடக்கு லண்டனின் வெம்ப்லியில் உள்ள ஒலிம்பிக் அலுவலக மையம்
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 7 மையங்கள்: எட்டிஹாட் டென்னிஸ் மையம் - மான்செஸ்டர்; எப்சம் டவுன்ஸ் ரேஸ்கோர்ஸ் - சர்ரே; ராபர்ட்சன் ஹவுஸ் - ஸ்டீவனேஜ்; வாழ்க்கை மையம் - நியூகேஸில்; ஆஷ்டன் கேட் ஸ்டேடியம் - பிரிஸ்டல்; மில்லினியம் பாயிண்ட் - பர்மிங்காம்; எக்செல் - லண்டன்.
வெகுஜன மையத்திலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் வாழும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் இங்கு வந்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.
பயணம் செய்ய முடியாதவர்கள் அருகிலுள்ள பொது மருத்துவர் தலைமையிலான சேவை மையம் அல்லது மருத்துவமனையைத் தொடர்பு கொள்ள காத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 3,559,179 பேருக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது, அதில் 447,261 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத்துறையின் அறிவிப்பின்படி, இதுவரை 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 45% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.