மருத்துவமனைகளை நாடும் 30 நொடிக்கு ஒருவர்... மோசமடையும் நிலைமை: அந்த முடிவை மருத்துவர்கள் எடுப்பார்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
511Shares

பிரித்தானியாவில் ஒவ்வொரு 30 நொடிகளுக்கு ஒருவர் கொரோனாவால் மருத்துவமனைகளை நாடுவதாக NHS தலைவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இனி மறைத்து வைப்பதற்கு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ள NHS தலைவர் Sir Simon Stevens, யார் பிழைக்க வேண்டும் என்பது தொடர்பான அந்த கடின முடிவை மருத்துவர்கள் எடுக்கும் கொடூர நிலை ஏற்படும் என்றார்.

இறுக்கமடையும் சூழ்நிலைகளால் மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உண்மை நிலவரம் இது தான், இதை இனி மூடி மறைப்பதில் பயனில்லை, மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் விளிம்பில் உள்ளன என்றார் Sir Simon Stevens.

வியக்கத்தக்க வகையில், இங்கிலாந்து முழுவதும் ஒவ்வொரு முப்பது வினாடிக்கும் ஒரு நோயாளி கொரோனா வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் இதுவரை 30 மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளது.

மேலும், நேற்று மாலை 4 மணி வரையான நிலவரப்படி, பிரித்தானியாவில் மொத்தம் 37,475 பேர் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது முதல் கொரோனா அலையை ஒப்பிடுகையில் இருமடங்காகும்.

இந்த நிலையில், நாலை பகல் 8 மணிக்கு முன்னர் மேலதிக அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான படுக்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள மருத்துவமனைகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, இதே நிலை நீடிக்கும் என்றால், கொரோனாவால் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பில் மருத்துவர்கள் கடினமான முடிவெடுக்கம் சூழல் உருவாகும் என்றார் இங்கிலாந்தின் NHS தலைவர் Sir Simon Stevens.

பிரித்தானியாவில் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி 1,295 பேர் மரணமடைந்துள்ளனர்.

மேலதிகமாக 41,346 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,357,365 என பதிவாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்