லண்டனில் தனியாக இருந்த சிறுவனை தூக்கி கொண்டு ஓடிய மர்ம நபர்! அப்போது இளம்தாயார் செய்த செயல்... சிசிடிவி புகைப்படம்

Report Print Raju Raju in பிரித்தானியா
499Shares

லண்டனில் சிறுவனை கடத்தி செல்ல மர்ம நபர் முயன்ற போது தக்க சமயத்தில் அவன் தாயார் வந்து காப்பாற்றியுள்ளார்.

லண்டனின் Northala Fieldsல் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அங்கு 5 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்த போது நபர் ஒருவர் அவனை அணுகியுள்ளார்.

பின்னர் சிறுவனை தூக்கி கொண்டு ஓட தொடங்கினார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் மர்ம நபரை துணிச்சலாக தடுத்து நிறுத்தி சிறுவனை மீட்டார்.

இந்த நிலையில் அங்கிருந்த தப்பி சென்ற மர்ம நபர் தொடர்பில் சில முக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

பொலிசார் கூறுகையில், சிறுவனை கடத்த முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம்.

கட்டுமஸ்தான உடல்வாகுடன் அவர் இருந்திருக்கிறார்.

அவர் குறித்து யாரேனும் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்திருந்தால் அதை எங்களிடம் கொடுக்கலாம்.

கடத்தல் முயற்சி சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்