இக்கட்டான சூழ்நிலையில் ஸ்கொட்லாந்து; களத்தில் இறங்கிய பிரித்தானிய ராணுவ படையினர்!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
338Shares

ஸ்காட்லாந்து முழுவதும் 80 புதிய கொரோனா தடுப்பூசி மையங்களை நிறுவ உதவுவதற்காக பிரித்தானிய ராணுவ வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.

பிரித்தானிய நாடுகளில் ஒன்றான ஸ்காட்லாந்தில் இதுவரை 162,000-க்கும் அதிகமானூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 5300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில், ஏற்கெனவே 200,000 ஸ்காட்லாந்து குடிமக்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஸ்காட்டிஷ் அரசாங்கம் வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள், 80 வத்துக்கு மேற்பட்டோர், பராமரிப்பு இல்லவாசிகள் மற்றும் ஊழியர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் சமூக பராமரிப்பு தொழிலாளர்கள் என கிட்டத்தட்ட 560,000 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என திட்டமிட்டுள்ளது.

அதேபோல் பிரித்தானிய அரசு நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பெரியவர்களுக்கும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசியின் முதல் டோஸை வழங்கவேண்டும் என திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தடுப்பூசி திட்டத்தை மும்முரமாக செயல்படுத்துவதற்காகக் ஸ்காட்லாந்து பகுதியில் புதிதாக 80 கோவிட் தடுப்பூசி மையங்களை நிறுவப்படவுள்ளது.

இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தை சுமுகமாகவும் விரைவாகவும் செயல்படுத்த பிரித்தானியாவின் ராணுவப் படையினர் களமிறங்கியுள்ளனர்.

ஸ்காட்லாந்தில் சில பொது மருத்துவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாக பிரித்தானிய மருத்துவ சங்கம் கூறியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, மையங்களுக்கான பொருத்தமான இடங்களை அடையாளம் காணவும், தடுப்பூசியை வழங்கவும் 98 வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வீரர்கள் ராயல் ஆர்மி மெடிக்கல் கார்ப்ஸ் மற்றும் Leuchars பகுதியைச் சார்ந்த ராயல் ஸ்காட்ஸ் டிராகூன் காவல் படையைச் சேர்ந்தவர்கள்.

ஸ்காட்லாந்து முழுவதும் 11 அணிகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அவர்கள், அடுத்த 28 நாட்களுக்கு என்ஹெச்எஸ் ஸ்காட்லாந்தை ஆதரிப்பார்கள்.

ஸ்காட்லாந்தில் மொபைல் கோவிட் சோதனை மைய

ங்களை இயக்க ராயல் ஸ்காட்ஸ் டிராகூன் காவல் படை உறுப்பினர்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

வருங்கலத்தில் தேவைக்கு ஏற்ப மேலும் அதிகமான ராணுவ வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்