பிரித்தானியாவில் இந்த 10 பகுதிகளில் கொரோனா பரவல் உச்சம்: வெளியான முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
968Shares

பிரித்தானியாவில் கடந்த இரு வாரங்களாக அமுலில் இருக்கும் தேசிய ஊரடங்கால், கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தாலும், 10 பகுதிகளில் மிக மோசமாக உச்சம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் தேசிய ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், 36 பகுதிகளில் கொரோனா பரவல் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இந்த 36 பகுதிகளில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 10 பகுதிகள் தொடர்பில் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதில், மெர்செசைடில் உள்ள நோவ்ஸ்லி பகுதியானது நாட்டின் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு, 100,000 மக்களில் 1,228 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, Barking and Dagenham, Newham மறும் Slough ஆகிய பகுதிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கெல்லாம், 1000,000 மக்களில் சுமார் 1,000 பேர்களுக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.

பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட 315 பகுதிகளில், அதிக கொரோனா பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டவை வெறும் 36 என தெரிய வந்துள்ளது.

இரண்டு வார கால தேசிய ஊரடங்கால் எஞ்சிய 279 பகுதிகளில் கொரோனா பரவல் நம்பிக்கை அளிக்கும் வகையில் சரிவை கண்டுள்ளது.

பிரித்தானியாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 10 பகுதிகள்:

1. Norwich

2. Preston

3. Mansfield

4. South Ribble

5. Plymouth

6. Torbay

7. Redditch

8. Malvern Hills

9. Chesterfield

10. Chorley

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்