பிரித்தானியாவில் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதம்?: அமைச்சர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
753Shares

பிரித்தானியாவில் அமைச்சர்கள் வெளியிட்டுள்ள தகவல்களால் பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகாலாம் என தெரியவந்துள்ளது.

பொதுமுடக்கத்தை விலக்கிக்கொள்வது குறித்து பேசியிருந்த வெளியுறவுச் செயலர் Dominic Raab, மார்ச் மாதம் வரை பொதுமுடக்கத்தை விலக்கத்துவங்குவது சாத்தியமில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆகவே, பள்ளிகள் மார்ச் மாதம் திறக்கலாம் என்ற ஒரு கருத்து உருவானது. இந்நிலையில் நேற்று பேசிய சுகாதாரச் செயலர் Matt Hancock, பொதுமுடக்கத்தை விலக்குவது என்றால், அதன் பொருள் உடனே பள்ளிகளை திறப்பது அல்ல என்று கூறியுள்ளதால், மார்ச் மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்படுவது சந்தேகம்தான் என்ற சூழல் உருவாகியுள்ளது.

நேற்றுடன் 4 மில்லியன் பிரித்தானியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு முடிந்துள்ள நிலையில், புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வரும் நிலையிலும் இங்கிலாந்தில் எப்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்படும் என்பது குறித்து பிரதமர் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில், அரசாங்க அதிகாரி ஒருவர், பள்ளிகள் திறப்பது என்பது நாட்டின் சுகாதாரச்சூழல் எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தது, ஆகவே, பொதுமுடக்கத்தால் நன்மை ஏற்பட்டிருந்தால் பள்ளிகள் திறப்புதான் முதல் வேலையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனும் மீண்டும் மீண்டும் பள்ளிகள் திறப்புதான் தனது முதன்மை நோக்கம் என்றே கூறிவந்தாலும், இதுவரை என்று பள்ளிகள் திறக்கும் என திகதி எதையும் குறிப்பிட்டுக் கூறவேயில்லை.

இந்நிலையில், 48 பள்ளிகளை நடத்திவரும் கல்வி அமைப்பு ஒன்றின் தலைவரான Steve Chalke என்பவர், ஈஸ்டர் விடுமுறைகள் முடிவது வரையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, அவரது கூற்றுப்படி, ஏப்ரல் மாத துவக்கம் வரை பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்