ஆயிரக்கணக்கான பிரித்தானியர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றம்... முழு பிரித்தானியாவும் தயாராக இருக்குமாறு போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1546Shares

பிரித்தானியாவை புயல் ஒன்று தாக்கியுள்ளதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான வீடுகளிலிருந்து பிரித்தானியர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியிலுள்ள சுமார் 2,000 வீடுகளில் வசிக்கும் பிரித்தானியர்கள் நேற்றிரவு வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். Christoph என்று பெயரிடப்பட்ட புயல் ஒன்று பிரித்தானியாவை தாக்கியதைத் தொடர்ந்து, பனியும் மழையும் கொட்டித்தீர்த்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கொட்டித்தீர்த்த மழையால் கிரேட்டர் மான்செஸ்டர், நார்த்தம்பர்லாண்ட் மற்றும் யார்க்‌ஷையர் ஆகிய பகுதிகளிலுள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சுற்றுச்சூழல் ஏஜன்சி இங்கிலாந்திலுள்ள 130 இடங்களுக்கு பெருவெள்ள எச்சரிக்கையும், 225 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு பெய்யவேண்டிய மழை, 36 மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிக்காக இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் மேலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரித்தானியா முழுவதும் உள்ள மக்கள் அதை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ள பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்களுக்கு உதவ தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்