ஒரே நாளில் உச்சம் பெற்ற துயரம்... இதைவிட மோசமான நாள் வரலாம்: எச்சரிக்கும் பிரதமர் ஜோன்சன்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1099Shares

பிரித்தானியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,820 பேர்கள் கொரோனாவுக்கு பலியான நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் தேசிய ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையிலும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,820 என புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் திகிலூட்டும் வகையில் உள்ளது என குறிப்பிட்டுள்ள பிரதமர் ஜோன்சன், நிச்சயமாக அந்த மரணங்கள் ஒவ்வொன்றும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஏற்படுத்தும் துன்பங்களைப் பற்றி நினைத்து வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையை கண்டிப்பாக ஒப்புக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் ஜோன்சன்,

உருமாறிய வீரியம் மிக்க புதிய கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியாவில் மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடியவர்களுக்கு தடுப்பூசி அளிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மிக விரைவில் ஒரு மாறுதல் ஏற்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுவரை நாடு முழுவதும் 4.6 மில்லியன் மக்கள் கொரோனா தடுப்பூசிக்கான தங்கள் முதல் மருந்தை எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் தரப்பு,

பிப்ரவரி பாதிக்குள் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார ஊழியர்கள், சமூக நல ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு தங்கள் முதல் டோஸ் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்