எத்தனை பேருக்கு பிரேத பரிசோதனை செய்வது?... கண்ணீர் விட்டுக் கதறிய மருத்துவமனை பெண் ஊழியர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1543Shares

மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடல்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு பெண் ஊழியர், கண்ணீர் விட்டுக் கதறும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

கன்வேயர் பெல்ட்டில் சூட்கேஸ்கள் வருவது போல தொடர்ந்து வரும் உடல்களை எப்படி தயார் செய்வது எனக் கேட்டு அவர் கண்ணீர் விட்டுக் கதறுவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

Hannah Leahy, ராயல் லண்டன் மருத்துவமனையில் anatomical pathology technologist என்னும் பொறுப்பில் இருப்பவர்.

அவரது வேலை, பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்காக இறந்த உடலை தயார் செய்வதும், போஸ்ட் மார்ட்டம் செய்யும் மருத்துவருக்கு உதவுவதும் ஆகும்.

இறந்த நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகளின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை செய்யும் ஐந்து பேர் கொண்ட குழுவில் Hannahவும் ஒருவர். அவர்களில் பெருமான்மையானோர் பெண்கள்தான்.

Hannahவிடம், தொடர்ந்து இப்படி கன்வேயர் பெல்ட்டில் சூட்கேஸ்கள் வருவது போல தொடர்ந்து வரும் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை கையாள்கிறீர்களே, எப்படி உணர்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அந்த கேள்வியைக் கேட்டதும், வெடித்துக் கிளம்பிய அழுகையுடன், கண்ணீர் விட்டுக் கதறிய Hannah, மனிதர்களை சூட்கேஸ்களுக்கு ஒப்பிடுவதில் எனக்கு விருப்பமில்லை, ஆனால், அப்படித்தான் இறந்த உடல்கள் தொடர்ந்து வருகின்றன என்றார்.

அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை, நான் பல ஆண்டுகளாக இந்த வேலையைத்தான் செய்து வருகிறேன், ஆனால், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று ஒருவர் கேட்கும்போது, நான் எப்படி உணர்கிறேன் என்பது இப்படித்தான் வெளிப்படுகிறது என்ற Hannahவால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவர் அழுவதைப் பார்த்து அவரது சக ஊழியரான பெண் ஒருவரும் அழுவதை வெளியாகியுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

தங்கள் உணர்வுகளை வீட்டிலுள்ளவர்களிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல் கொரோனா பரவல் காலம் முழுவதும் அடக்கி வைத்த துக்கம் கண்ணீராக வெடிக்கிறது.

ஒரு பக்கம் கொரோனாவல் பலர் இறந்துகொண்டே இருக்க, மறுபக்கம் இறந்தவர்களின் உடல்களை கையாளும் மருத்துவமனை ஊழியர்கள் பல மாதங்களாக அனுபவித்து வரும் வலியும், வேதனையும், வெறுப்பும், சலிப்பும், இப்படி யாராவது அவர்களிடம் அன்பாக ஒரு வார்த்தை பேசும்போது வெடித்துக் கிளம்புவதை இந்த வீடியோ உணர்த்தியுள்ளது. என்று தணியுமோ இந்த கொலைகார கொரோனாவின் கோரப்பசி!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்