பிரித்தானியா உள்துறை செயலாளர் எச்சரிக்கை! அடுத்த வாரம் முதல் இதை மீறினால் 6,400 பவுண்ட் வரை அபராதம் என அறிவிப்பு

Report Print Santhan in பிரித்தானியா
1136Shares

பிரித்தானியாவின் உள் துறை செயலாளாரான பிரித்தி பட்டேல், அடுத்த வாரம் முதல் வீட்டு நிகழ்ச்சிகளில் கொரோனா விதிமுறைகளை மீறினால் 6400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் தீவிரமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1290 மக்கள் உயிரிழந்துள்ளதுடன், புதிதாக 37892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த வைரஸ் பரவலை எப்படியாவது கட்டுப்படுத்த, அரசு போராடி வருகிறது.

இந்நிலையில் உள்துறை செயலாளர் Priti Patel இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வீட்டு நிகழ்ச்சிகளில் 15-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டால், கொரோனா விதிமுறைகளை மீறியதாக கூறி, 800 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

இதுவே தொடர்ந்து நடந்தால் 6400 பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இது பிரித்தானியா முழுவதுமா என்பது தெரியவில்லை.

ஆனால், ஆங்கில ஊடகம் ஒன்று, இந்த விதிமுறைகள் அடுத்த வாரம் முதல் இங்கிலாந்தில் நடைமுறைக்கு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், தற்போது இருக்கும் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு, அபராதத் தொகை அதிகமாக்கப்படலாம், என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சிலரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால், பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனால் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதை தவிர, வேறு வழியில்லை, ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் பொலிசாருக்கு தேவையான அதிகாரங்களை வழங்கியுள்ளோம் என்று Priti Patel கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை குறித்து, National Police Chiefs’ Council (NPCC) தலைவர் Martin Hewitt கூறுகையில், இந்த, கடுமையான நடவடிக்கைகளை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்