இனி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும்.. பிரித்தானிய அரசு அறிவிக்கவுள்ள முக்கியமான திட்டம்!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
617Shares

பிரித்தானியாவில் கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவரையும் பரிசோதனைக்கு வரவேற்க, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் சுய தனிமை ஆதரவு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்க அரசு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 1,290 இறப்புகள் மற்றும் 37,892 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்த சூழலில், தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவர தற்போதைய கட்டுப்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என்பதில் நிச்சயமற்ற நிலையே உள்ளது. இதனால், பூட்டுதல் நடவடிக்கைகள் எப்போது அகற்றப்படலாம் என்று கூற பிரதமர் போரிஸ் ஜான்சன் மறுத்துவிட்டார். அதனைப் பற்றி முடிவெடுக்க இன்னும் நாட்கள் இருப்பதாக அவர் கருதுகிறார்.

நாளுக்கு நாள் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகிவந்தாலும், மக்களில் பலர் இன்னும் தங்களுக்கு நோய் தொற்றின் அறிகுறிகள் இருப்பதை வெளிப்படுத்தாமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதனை வெளிப்படுத்தினால், தங்களில் வேலை பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தை இவ்வாறு நடக்கலாம் என கருதப்படுகிறது.

இவ்வாறு சிலரது தவறான முடிவுகளால் தொற்று எண்ணிக்கை குறைவது சாத்தியமற்றது என்ற நிலையில், பிரித்தானியா அரசாங்கம் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவிட் -19க்கு சாதகமாக சோதிக்கும் பிரித்தானியாவில் உள்ள அனைவருக்கும் £500 நிதியுதவி அளிக்க அமைச்சர்கள் பரிசீலித்து வருவதாகவும், சுய தனிமை ஆதரவு திட்டத்தின் கீழ் இந்த வியத்தகு மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்மொழியப்பட்ட மாற்றம் அவசியமானது என்று கருதப்படுகிறது, ஏனெனில் அரசாங்க பரிசோதனைக்கு அறிகுறிகளுடன் 17% பேர் மட்டுமே ஒரு பரிசோதனையைப் பெற முன்வருகின்றனர். காரணம், சோதனை முடிவு நேர்மறையாக இருந்தால் மக்கள் தங்கள் வேலை தடைப்படும் என்று அச்சப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த சுய தனிமை ஆதரவு திட்டத்தை செயல்படுத்த வாரத்திற்கு 453 மில்லியன் டொலர் வரை செலவாகும், இது தற்போதைய அமைப்பின் விலையை விட 12 மடங்கு அதிகமாகும். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த திட்டத்தை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்