பிரித்தானிய கடற்படை தளத்துக்குள் மறைந்திருந்த அழகிய இளம்பெண்: இராணுவ வீரரை மயக்கிய உளவாளியா என சந்தேகம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
373Shares

பாதுகாப்பு மிக்க பிரித்தானிய கடற்படை தளத்துக்குள் அழகிய இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Somerset என்ற இடத்தில் அமைந்துள்ள கடற்படை தளத்தில், துணிகள் வைக்கும் அலமாரிக்குள் அழகான இளம்பெண் ஒருவர் அரை குறை உடையுடன் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், அந்த பெண் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், நெதர்லாந்து குடியுரிமை கொண்டவர் என்பதும், இரண்டு வாரங்களாக அவர் அந்த தளத்துக்குள் மறைந்திருந்ததும் தெரியவந்தது.

கடற்படை தளத்தில் பணியாற்றும் விமான டெக்னீஷியன் ஒருவர் அந்த பெண்ணை தனது காரின் பின்பக்கத்தில் வைத்து மறைத்து கடற்படை தளத்துக்குள் கொண்டுவந்துள்ளார்.

அந்த பெண் தன் காதலி என்று கூறியுள்ளார் அந்த டெக்னீஷியன். அந்த பெண் அந்த டெக்னீஷியனை தன் அழகைக் காட்டி மயக்கி, இராணுவ இரகசியங்களை திருட வந்த உளவாளியாக இருக்கலாமோ என முதலில் சந்தேகம் ஏற்பட்டது.

ஆனால், பாதுகாப்புத்துறை அதை மறுத்துள்ளது. ஆயுதம் தாங்கிய வீரர்களால் இராணுவ தளத்தை விட்டு வெளியேற்றப்பட்ட அந்த பெண் உடனடியாக பிரித்தானியாவை விட்டு வெளியேறியதாக The Sun பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்