பிரித்தானியாவில் கொரோனாவால் மிகவும் மோசமடைந்த நிலைமை... கடன் வாங்கும் நிலையில் 8 மில்லியன் மக்கள்: புள்ளிவிவரம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
485Shares

பிரித்தானியாவில் கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் சுமார் 8 மில்லியன் மக்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக தேசிய புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் பரவும் கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, தேசிய ஊரடங்கு அமுலில் உள்ளது.

இதனால் தொழில்கள் முடங்கியுள்ளதுடன், தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபமாக மாறியுள்ளது.

பெரும்பாலும், சுயதொழில் புரியும் தொழிலாளர்கள் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஏழ்மையால் அவதிப்படுபவர்களுக்கும் கொரோனா காலத்திலும் வருவாய் ஈட்டுவதுடன், அதை எதிர்காலம் கருதி சேமிப்பவர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிர்ச்சியளிக்கும் வகையில் விரிவடைவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் தொடங்கி, ஊரடங்கு அமுலுக்கு வந்த இந்த காலகட்டத்தில் கடன் வாங்கும் நிலைமை உச்சம் பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மட்டுமின்றி, மக்கள் பெரிய தொகையை கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் வரையான காலகட்டத்தில் பிரித்தானியாவில் கடன் வாங்கும் நிலைமையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 5.6 மில்லியன் என இருந்த நிலையில்,

அடுத்த ஆறு மாதங்களில், அதாவது டிசம்பர் இறுதியில் இந்த எண்ணிக்கை 8.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சமீப மாதங்களாக பிரித்தானியாவில் பெரும்பாலான குடும்பங்கள் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கவோ, எதிர்காலம் கருதி சேமித்து வைக்கப்பட்ட பணத்தையோ நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்