கடந்த ஆண்டு பிரித்தானியாவின் கென்ட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ், முன்பு இருந்த கொரோனா வைரஸை விட மிகவும் ஆபத்தானது என்பதை பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று உறுதிபடுத்தினார்.
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதே போன்று பத்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ், லண்டன் மற்றும் தென்கிழக்கில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் அதிக அளவு இறப்பு ஏற்படுவதற்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்பதற்கு சான்றுகள் இருப்பதாக கூறினார்.
மேலும், அவர் இந்த புதிய மாறுபாட்டின் தாக்கமே அதிக அளவில் கொரோனா பரவி வருவதற்கு காரணம், இது என்.எச்.எஸ் ஊழியர்களுக்கு கடும் அழுத்ததை கொடுக்கிறது.
இப்போது 38,562 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர். இது ஏப்ரல் மாததில் இருந்த கொரோனா உச்சத்துடன் ஒப்பிடும் போது 78 சதவீதம் அதிகம் என்று கூறினார்.
தற்போது வரை 5.4 மில்லியன் மக்கள் தடுப்பூசிகளை பெற்றிருப்பதாகவும், ஆனால் இது போதாது, இன்னும் நிறைய செய்ய வேண்டியிருப்பதாகவும், இலக்கு நீண்டு கொண்டே செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிப்ரவரியின் நடுப்பகுதியில் முதல் நான்கு முன்னுரிமை குழுக்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் புதிய வகை கொரோனாவில் இருந்து பிரித்தானியாவை பாதுகாக்க அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
புதிய கொரோனா பரவலில் இருந்து நாட்டைப் பாதுகாக்க பிரித்தானியாவின் எல்லைகளில் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தற்போதைய பூட்டுதலை எப்போது நீக்க முடியும் என்ற கேள்விக்கு பிரதமர் மறுத்துவிட்டார், இருப்பினும் நாட்டை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய அரசாங்கம் விரும்புகிறது என்று அவர் கூறினார்.
எப்படி இருப்பினும், கொரோனாவின் மற்றொரு அலையினை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
எந்தவொரு கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதற்கு முன்பு அது குறித்து கவனமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கொரோனா வைரஸுடன் நாம் நீண்ட காலம் வாழ வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். எந்தவொரு நடவடிக்கைகளையும் எப்போது, தளர்த்த முடியும் என்பது ஒரு திறந்த கேள்வி என்று நான் நினைக்கிறேன்.
ஊரடங்கை தளர்த்துவதற்கான அனைத்தையும் செய்ய நாங்கள் விரும்புகிறோம், ஆனால் பாதுகாப்பு என்பது மக்களுக்கு மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வலன்ஸ், புதிய வகை கொரோனா வைரஸால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நாங்கள் மருத்துவமனைகளில் இருந்து வரும் புள்ளி விவரங்களை பார்க்கும்போது, முதலில் பரவிய கொரோனா வைரஸ் மற்றும் புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் உள்ளவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் ஒரே மாதிரியாக இருக்கிறது.
ஆனால் அதே சமயம், புதிய வகை கொரோனா வைரஸ் இறப்பு அதிகரித்ததற்கு காரணம் என்பதற்கான உண்மையான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
இருப்பினும், நேர்மறையானதை பரிசோதித்தவர்களின் அடிப்படையில் தரவைப் பார்க்கும்போது, நேர்மறையை சோதித்த எவரும், பழைய வைரஸுடன் ஒப்பிடும்போது புதிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளதாக தெரிவித்தார்.