லண்டன் பூங்காவில் நடந்த கோர சம்பவம்: நால்வரின் புகைப்படம் வெளியிட்டு உதவி கேட்ட பெருநகர காவல்துறை

Report Print Arbin Arbin in பிரித்தானியா
338Shares

லண்டன் பூங்கா ஒன்றில் சீரழிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் நால்வர் கும்பலின் புகைப்படம் வெளியிட்டு பெருநகர காவல்துறை உதவி கோரியுள்ளது.

குறித்த புகாரின் பேரில் இந்த நால்வர் கும்பலுடன் விவாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ள பொலிசார், இவர்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் கட்டாயம் உதவ வேண்டும் என கோரியுள்ளனர்.

20 வயது கடந்த குறித்த இளம்பெண், கடந்த ஜூலை 31 அன்று, ஸ்டாக்வெல், தெற்கு லண்டனில் உள்ள மதுபான விடுதியில் நேரம் செலவிட்டுள்ளார்.

பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு, அந்த மதுபான விடுதியில் வைத்து பழக்கமான நால்வருடன் அருகாமையில் உள்ள பூங்கா ஒன்றில் சென்றுள்ளார் குறித்த இளம்பெண்.

பூங்காவிலும் இவர்கள் ஐவரும் மது அருந்தியதுடன் பேசி கலகலப்பாக இருந்துள்ளனர்.

ஆனால், சுமார் 2.30 மணியளவில் குறித்த இளம்பெண் அதிக போதை காரணமாக சுய நினைவை இழந்துள்ளார்.

அதன் பின்னரே, அந்த நால்வர் கும்பல் குறித்த இளம்பெண்ணை சீரழித்திருக்கலாம் என பொலிசார் கூறுகின்றனர்.

கண்விழித்த போது, அவர் அங்கே தனித்துவிடப்பட்டதுடன், அவரது வங்கி அட்டைகளும் திருடு போயுள்ளதை அறிந்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்த காட்சிகளில் இருந்து நால்வரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தின் தன்மையை புரிந்து கொண்டு பொதுமக்கள் கண்டிப்பாக உதவ வேண்டும் என பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இதே பூங்காவில் மூவர் கும்பல் ஒன்று பெண் ஒருவரை சீரழித்த விவகாரத்தில் கைதானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்