பிரித்தானிய சிறைகளில் பெண்களுடன் அவர்களது குழந்தைகளும் தங்க அனுமதி... வரமா சாபமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
138Shares

பிரித்தானிய சிறைகளிலிருந்து விடுதலையாக உள்ள பெண்களுடன் அவர்களது குழந்தைகளும் தங்க அனுமதியளிக்கப்பட உள்ளது.

நாளை சிறையிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது வாழ்க்கையை எதிர்கொள்வதை எளிதாக்கும் வகையில் பெண்களுக்கு உதவுவதற்காக, கூடுதலாக 500 அறைகள் ஒழுங்கு செய்யப்பட உள்ளதாக நீதித்துறை அறிவித்துள்ளது.

ஆனால், குற்றம் செய்துவிட்டு சிறைக்கு வந்திருக்கும் பெண்கள், தண்டனை அனுபவிப்பதற்கு பதில் வசதிகளை அனுபவிக்க அனுமதிக்கப்படும்பட்சத்தில், சிறைத்தண்டனை என்பது சாபமா அல்லது வரமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக, ஏற்கனவே தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணம், இப்போது இந்த சிறைகளில் புதிய அறைகளை ஏற்பாடு செய்வதற்காக கொடுக்கப்படுவதால், தொண்டு நிறுவனங்களுக்கு பணம் குறைக்கப்பட்டுள்ளதால் தொண்டு நிறுவன தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

Howard League for Penal Reform என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவரான Andrew Neilson, குற்றச் செயல்களில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையைக் குறைப்பது நீதி அமைப்பின் நோக்கம் என்றால், பெண் குற்றவாளிகளுடன் அவர்களது குழந்தைகளும் தங்க அனுமதியளிக்கப்பட உள்ள இந்த திட்டம் தவறானது என்கிறார்.

அதேபோல், Prison Reform Trust என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த Emily Evison கூறும்போது, இப்படி செய்வதற்கு பதிலாக, குறுகிய கால தண்டனைகளுக்காக பெண்களை சிறைக்கு அனுப்பாமல் தவிர்க்கலாமே என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்