ஜோ பைடன் முதன் முதலாக தொடர்பு கொண்ட ஐரோப்பிய தலைவர்: சிறப்பான தொடக்கம் என பெருமிதம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
117Shares

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன்.

இது இரு நாடுகளுக்கும் இடையேயான சிறப்பான புதிய தொடக்கம் என அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜோ பைடன், தொடர்பு கொள்ளும் முதல் ஐரோப்பிய தலைவர் போரிஸ் ஜோன்சன் என தெரிய வந்துள்ளது.

இருள் சூழ்ந்த உலகில் அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடனின் வெற்றி எதிர்காலம் குறித்த நம்பிக்கை அளிப்பதாக பிரதமர் ஜோன்சன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

டிரம்பிற்கு பிந்தைய காலத்தில் கூட - அமெரிக்காவின் முன்னுரிமை பட்டியலில் பிரித்தானியா இன்னும் உயர்ந்த இடத்தில் இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது என கூறப்படுகிறது.

சுமார் 35 நிமிடங்கள் நீண்ட இந்த உரையாடல், நட்பு ரீதியாகவும், பல்வேறு விடயங்களை மனந்திறந்து பேசும் வகையிலும் அமைந்ததாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் அடுக்கடுக்கான புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ள ஜோ பைடனுக்கு, வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் ஜோன்சன், இக்கட்டான சூழலில், இதுபோன்ற துரித நடவடிக்கைகள் அவசியம் என பாராட்டியதாக கூறப்படுகிறது.

ஜூன் மாதம் கார்ன்வாலில் உள்ள செயின்ட் இவ்ஸ் அருகே ஜி 7 உச்சி மாநாட்டில் ஜனாதிபதி பைடன் உடனான சந்திப்பை எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் ஜோன்சன் கூறியுள்ளார்.

மட்டுமின்றி, இந்த கொரோனா காலகட்டத்தை முற்றாக ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும் தாம் தயாராக இருப்பதாக பிரதமர் ஜோன்சன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்