பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு: 4 தடுப்பூசி மையங்கள் தற்காலிகமாக அடைப்பு!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
4Shares

வேல்ஸ் பகுதியில் பாதகமான வானிலை காரணமாக 4 கொரோனா தடுப்பூசி மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார வாரியம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் தேசிய வானிலை மையமான Met Office, நேற்று வேல்ஸ் பகுதியில் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை அப்பகுதியில் மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பிரிட்ஜெண்ட், ரோண்ட்டா, அபெர்சினான் மற்றும் மெர்திர் டைட்ஃபில் ஆகிய நான்கு சமூக தடுப்பூசி மையங்கள் மூடப்படும் என்று சி.வி.எம் டாஃப் மோர்கன்வ்க் பல்கலைக்கழக சுகாதார வாரியம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் 3cm வரை பனி பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது, ப்ரெகோன் பீக்கான்கள் மற்றும் ஸ்னோடோனியாவில் 10 முதல் 15cm வரை எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமையில் கொரோனா தடுப்பூசி போட அப்பாயின்மென்ட் உள்ளவர்கள், வேறு நாட்களில் தங்கள் தடுப்பூசிகளை பெறுவதற்கு அல்லது இதர சந்தேகங்களுக்கு நியமனக் கடிதங்களில் உள்ள எண்ணை அழைக்குமாறு சுகாதார வாரியம் வலியுறுத்தியது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்