பிரித்தானியாவில் அதிகரிக்கும் தென்னாப்பிரிக்க மற்றும் பிரேசில் வகை கொரோனா தொற்று!

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் பரவத் தொடங்கியுள்ள தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் கடந்த 10 நாட்களில் கூடுதலாக 42 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் காணப்படும் பொதுவான கொரோனா வைரஸுடன் பிரித்தானியாவில் கடந்த மாதம் புதிதாக பரவத் தொடங்கிய பி 117 வகை கொரோனா வைரஸ் அந்நாட்டில் தொற்று எண்ணிக்கையை பல மடங்காக அதிகரிகாச் செய்துள்ளது.

இதனால் அந்நாட்டில் ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவும், இறப்பு எண்ணிக்கையை குறைக்கவும் பிரித்தானிய அரசாங்கம் சர்வதேச போக்குவார்த்து முடக்கம், தேசிய அளவிலான ஊரடங்கு, பிரம்மாண்ட தடுப்பூசி திட்டம் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகளும் இப்போது பிரித்தானியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி 35-ஆக இருந்த தென்னாப்பிரிக்க வகை கொரோனா பாதிப்பு, இப்போது 77-ஆக உயர்ந்துள்ளது.

இந்த வைரல் சமூக பரிமாற்றத்தை விட, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் மற்றும் அவர்களுக்கு தொர்புடையவர்களிடம் மாட்டுமே பரவியுள்ளதாக பிரித்தனைய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சமீபத்தில் பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்புகளும் பிரித்தானியாவில் பதிவாகியுள்ளன.

பிரேசில் வேரியண்ட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் இருப்பதாகவும், சமீபத்திய எண்ணிக்கையில் 9 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அவையும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்