பிரித்தனையா ஒரே நாளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி, தடுப்பூசி திட்டத்தில் புதிய ஒரு நாள் சாதனையைப் படைத்துள்ளது.
இதுவரை கிட்டத்தட்ட 6.4 மில்லியன் பிரித்தானியர்கள் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளனர். 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், NHS முன்களப் பணியாளர்கள், முதியோர் இல்ல குடியிருப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் இதில் அடங்குவர்.
ஆனால், பிரித்தானிய அரசு பிப்ரவரி நடுப்பகுதியில் 15 மில்லியன் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தடுப்பூசி போடுவதை இலக்காக கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய ஒரு நாளைக்கு 400,000 தடுப்பூசிகள் வழங்கப்பட வேண்டும்.
கடந்த 5 நாட்களாக இலக்கை எட்டும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், சனிக்கிழமையன்று அதிகபட்சமாக 493,013 கொரோனா தடுப்பூசிகள் நிர்வகிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ தரவை வெளியிட்டுள்ளது.
மேலும், பிரித்தானியாவில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் முக்கால்வாசி பேர் இப்போது முதல் டோஸைப் பெற்றுள்ளனர் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.