என் மகன் சாவுக்கு காரணம் நான்தான்... ஆனால்: லண்டனில் கொல்லப்பட்ட சிறுவனின் தாய் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

லண்டனில் தன் மகனை கொலை செய்த பெண் ஒருவர், தன் மகனின் சாவுக்கு காரணம் தான்தான் என்றாலும், தான் கொலை செய்யவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகத்து மாதம் 15ஆம் திகதி, மேற்கு லண்டனிலிருக்கும் ஆக்டனில் வாழும் ரஷ்ய நாட்டவரான Olga Freeman (40),பொலிஸ் நிலையம் சென்று, தான் தன் மகனை கொலை செய்துவிட்டதாக தெரிவித்ததன் பேரில் பொலிசார் அங்கு விரைந்தனர்.

Dylan Freeman (10) என்னும் அந்த அழகுச் சிறுவன் இறந்து கிடந்ததைப் பார்க்க முடியாமல், பெண் பொலிசார் ஒருவர் கவலையும், கோபமும், ஏமாற்றமுமாக குழம்பி நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்தது.

Dylan வாய்க்குள் ஸ்பாஞ்ச் துண்டு ஒன்றை திணித்து அவனது மூச்சை நிறுத்தி விட்டதாக Olga நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.கடுமையான ஆட்டிச பாதிப்பு கொண்டிருந்ததோடு, Dylanக்கு Cohen Syndrome என்ற மரபணுக்குறைபாடும் இருந்தது.

அவனை யாராலும் கவனித்துக்கொள்ள இயலாத அளவுக்கு Dylan முரட்டுப்பையனாகவும் இருந்தான். சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றில் பயின்று வந்த Dylan, கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கும் செல்ல இயலாத நிலை ஏற்பட, அவனை 24 மணி நேரமும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு Olga மீது விழுந்துள்ளது.

ஆக, ஏராளமான பிரச்சினைகள் கொண்ட பிள்ளையைப் கவனித்துக்கொள்ள தனியாக போராடிப் பார்த்து, இயலாமல் போய், பெற்ற மகனையே கொல்லத் துணிந்துவிட்டார் Olga.

இந்நிலையில், இன்று நீதிமன்றம் முன் இணையம் வாயிலாக விசாரணை ஒன்றில் பங்கேற்ற Olga, தன் மகனின் சாவுக்கு காரணம் தான்தான் என்றாலும், தன் மகனை தான் கொலை செய்யவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனது மன நல பிரச்சினைகள்தான் அவனது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்தன என்று அவர் கூறியதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Olga, பிரசித்திபெற்ற புகைப்படக்கலைஞர் Dean Freeman என்பவரின் மனைவி என்பதும், நீண்ட காலத்திற்கு முன்பே இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்