பாலத்திலிருந்து குதித்து வாழ்வை முடித்துக்கொள்ள முயன்ற பிரித்தானிய இளம்பெண்... இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

கடும் மன அழுத்தம் காரணமாக பாலம் ஒன்றிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த ஒரு பெண்ணை, அவ்வழியே சென்ற இரண்டு பெண்களின் தந்தையான ஒருவர் கவனித்துள்ளார்.

Tony Witton (56) என்ற அந்த நபர், மெதுவாக அந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து, அவளது கைகளை பாசத்துடன் பிடித்துக்கொண்டு அவளது மனதை மாற்றியதோடு அவசர உதவியையும் அழைத்துள்ளார்.

கென்டைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் Jess Paramor, அப்போது அவளுக்கு வயது 19.சிகிச்சைக்குப்பின் சற்று நிலைமை சீரடைந்தாலும், மீண்டும் நான்கே நாட்களுக்குப்பின் அதே இடத்திற்கு சென்று மீண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் Jess.

யார் செய்த புண்ணியமோ தெரியாது, சினிமாவுக்கு சென்று கொண்டிருந்த ஒரு தம்பதி அவளைக் கண்டு, அவளை மீட்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

இப்போது Jessக்கு 20 வயதாகிறது.தன்னைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பி அவர்களை தேடியிருக்கிறார் Jess. ஆனால், அவர்கள் சமூக ஊடகம் எதிலும் இல்லை.

என்றாலும், நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் தன்னைக் காப்பாற்றியவர்களைக் கண்டுபிடித்துவிட்டார் Jess.

தான் நன்றாக இருப்பதாகவும், மருந்தக துறை தொடர்பாக படிப்பதாகவும் தான் கூறியதைக் கேட்டு சந்தோஷத்தில் அவர்கள் திக்குமுக்காடிப்போனதாக தெரிவிக்கிறார் Jess.

Jessஐ முதலில் காப்பாற்றியவரான Tony Witton கென்டில் ஒரு மேலாளராக பணிபுரிகிறார்.தான் தற்கொலைக்கு முயன்ற Jessஐ பார்த்ததும், தான் அதே வயதுடைய இரண்டு பெண்களின் தந்தை என்பதால், தனக்குள்ளிருந்த தந்தையின் குணம்தான் உடனே வெளிப்பட்டது என்கிறார்.

Jessஐ நல்ல நிலையில் பார்க்க அவருக்கும் தாங்க இயலாத மகிழ்ச்சி! இதற்கிடையில், மன நல பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டதால், அதன் பக்க விளைவுகள் குறித்து அறிந்துள்ள Jess, அந்த மருந்துகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்