தொடரும் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை... பிரித்தானிய ஏற்றுமதி பாதிப்பு: பிரெக்சிட்டால் தொடரும் பிரச்சினைகள்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
0Shares

பிரெக்சிட் விதிகள் இன்னமும் அன்றாட பிரச்சினைகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரவேண்டிய காலிபிளவர், ஆரஞ்சு வகை பழங்கள், பிரெஞ்சு ஒயின் முதலான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பிரித்தானிய வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிரான்சிலோ, பிரித்தானியாவிலிருந்து அனுப்பப்படும் மாமிசம் சரியான நேரத்துக்கு வந்து சேராததால் மாமிசத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அனுப்பப்பட்டுவிட்ட மாமிசம் சரியான நேரத்துக்கு வராததால் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள மாமிசம் ஆங்காங்கு சிக்கி அழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், வட அயர்லாந்திலும் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த பற்றாக்குறைக்கு காரணம் பிரெக்சிட் அல்ல என அமைச்சர்கள் கூறிவருகிறார்கள்.

இதுபோக, பிரித்தானியாவிலிருந்து உடைகள், காலணிகள் முதலானவற்றை ஏற்றுமதி செய்வோருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உபரி கட்டணம் விதிக்கப்படுவதால், அப்படி உபரி கட்டணம் செலுத்தி பொருட்களை வாங்க மக்கள் தயங்குகிறார்கள்.

இன்னொரு பிரச்சினை, பிரித்தானியாவிலிருந்து ஒன்லைனில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளவர்களால் வாங்கப்படும்போது, அவர்கள் அவற்றை வேண்டாம் என திருப்பிக் கொடுத்துவிட்டால், அவற்றை மீண்டும் பிரித்தானியாவுக்கு கொண்டு வர ஆகும் செலவைக் கணக்கிட்டால், அவற்றை பிரித்தானியாவுக்கு கொண்டு வருவதற்கு பதிலாக ஐரோப்பிய ஒன்றியத்திலேயே போட்டு எரித்துவிடுவதே லாபம் என்ற மன நிலைமைக்கு ஆளாகிவிட்டார்கள் ஏற்றுமதியாளர்கள்.

இப்படிப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்கவேண்டுமானால், பேசாமல் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலேயே கிளைக் கடைகளை திறப்பதுதான் நல்லது என்ற ஆலோசனையும் வர்த்தகர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்