பிரித்தானியா முழுவதும் மஞ்சள் நிற எச்சரிக்கை! கடும் பனிப்பொழிவால் இயல்பு வழக்கை முடக்கம்

Report Print Ragavan Ragavan in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல பகுதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து வீசும் வலுவான பனிக்காற்று காரணமாக நாட்டின் பல பகுதிகள் உறைபனியில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு மேலும் பனிக்காற்று வீசக்கூடும் என்பதால் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் பெரும்பகுதிக்கு மஞ்சள் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், திங்கள் மதியம் வரை ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது-அதாவது பயண இடையூறு மற்றும் மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கடும் பனிப்பொழிவு காரணமாக எசெக்ஸ் மற்றும் சஃபோல்கில் உள்ள கோவிட் தடுப்பூசி மையங்களை தற்காலிகமாக மூடப்பட்டது.

மேலும் பிரித்தானியாவின் தென்கிழக்கு பகுதிகளில் திங்கட்கிழமை ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

கென்ட்டின் மான்ஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 14cm (5.5in) பனி பதிவாகியிருந்தது. நாட்டின் சில கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து பனிப்பொழிவு இருக்கும் என்பதால் திங்களன்று 15 செ.மீ வரை பனியைக் கொண்டுவரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்