பரவும் வீரியம் மிகுந்த தொற்று: பிரித்தானியர்களுக்கு மூன்றாவது டோஸ் வழங்கவும் வாய்ப்பு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares

பரவும் உருமாற்றம் கண்ட வீரியம் மிகுந்த தொற்றால், பிரித்தானியாவில் பல மில்லியன் மக்களுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்படுகிறது.

குறித்த விவகாரம் தொடர்பில் NHS தலைவர்களுடன் அமைச்சர்கள் விவாதித்து வருவதாகவும், இந்த ஆண்டில் பொதுமக்களுக்கு அந்த மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி இந்த மூன்றாவது டோஸ் தடுப்பூசியானது மருந்தகங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த மூன்றாவது டோஸ் மருந்தானது அனைவருக்கும் தேவைப்படாது எனவும், வயது மற்றும் உடல் நிலை காரணங்களால் பாதிப்பு அதிகம் கொண்ட மக்களுக்கு மட்டும் பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைவருக்கும் இந்த மூன்றாவது டோஸ் தேவைப்படும் எனில்,

தற்போது தடுப்பூசி வழங்கப்படும் அதே மையங்களில் இருந்து மீண்டும் வழங்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Oxford-AstraZeneca தடுப்பூசியால் தென்னாபிரிக்க உருமாற்றம் கண்ட தொற்றால் ஏற்படும் லேசான பாதிப்புகளைக் கூடத் தடுக்காது என்று சுமார் 2,000 நோயாளிகளில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், உருமாற்றம் கண்ட தொற்றால் ஏற்படும் தீவிரமான பாதிப்பை தற்போதுள்ள தடுப்பூசிகளால் தடுக்க முடிந்தால் கூட, கொரோனா பரவலை தடுத்து நிறுத்த முடியாது என்பதே கவலைக்குரிய விடயம் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த நிலையிலேயே Oxford-AstraZeneca தடுப்பூசியை தென்னாபிரிக்காவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர நிபுணர்கள் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் மட்டும், நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு தென்னாபிரிக்கா உருமாற்றம் கண்ட தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவுக்கு 2 டோஸ் மருந்து போதுமானது என நிபுணர்கள் தரப்பால் கூறப்பட்டு வந்த நிலையில், மூன்றாவது டோஸ் வழங்க திட்டமிடப்பட்டு வருவது கொரோனா தொற்றின் தாக்கத்தை வெளிக்கொண்டு வருவதாக சில நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்