பிரித்தானியாவின் ஹொட்டல் தனிமைப்படுத்தல்... உடனடியாக நாடு திரும்பும் திரளான பயணிகளால் அச்சம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares

உருமாற்றம் கண்ட கொரோனா பரவல் நாடுகளில் இருந்து இதுவரை 200,000 பயணிகள் பிரித்தானியா திரும்ப திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உருமாற்றம் கண்ட கொரோனா பரவல் மிகுந்த பகுதிகள் என 33 நாடுகளின் பட்டியலை பிரித்தானியா வெளியிட்டிருந்தது.

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக 10 நாட்கள் ஹொட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வெளியான தரவுகளின் அடிப்படையில், உடனடியாக 205,000 பயணிகள் பிரித்தானியா திரும்ப முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த 33 நாடுகள் பட்டியலில் இல்லாத பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா உருமாற்றம் கண்ட தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட 27 நாடுகளில் இருந்து சுமார் 180,000 பயணிகளும் நாடு திரும்ப உள்ளனர்.

இதனால் உருமாற்றம் கண்ட கொரோனா பரவல் தொடர்பில் அதிக கவலை ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, ஹொட்டல் தனிமைப்படுத்துதல் திட்டத்தை அமுலுக்கு கொண்டுவருவதில் கால தாமதமே முதன்மை காரணமாக கூறப்படுகிறது.

பிரித்தானியா வெளியிட்ட அச்சுறுத்தல் மிகுந்த 33 நாடுகள் பட்டியலில் இருந்து விடுபட்ட மேலும் 29 நாடுகளில் தற்போது உருமாற்றம் கண்ட கொரோனா அச்சுறுத்தல் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, நேரடியாக தனிமைப்படுத்தலுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இதன் பொருட்டு, அரசு ஹொட்டல்களை முன்பதிவு செய்திருக்கலாம் என நம்பப்பட்ட நிலையில், இதுவரை ஹொட்டல்கள் எதுவும் தனிமைப்படுத்தலுக்காக தயாராகவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் 28,000 ஹொட்டல் அறைகள் பயன்பாட்டில் இருப்பதாகவும் பயணிகளே முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால், பிப்ரவரி 15ம் திகதிக்கு பிறகு நாளுக்கு 1,425 பயணிகளை தங்கவைக்கும் அளவுக்கான ஹொட்டல் அறைகளை தயார் படுத்த அமைச்சர்கள் ஹொட்டல் தலைவர்களிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்